திருநெல்வேலி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திருநெல்வேலியில் இருக்கும் ஐந்து முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மழைப் பொழிவால் திருநெல்வேலியின் முக்கிய அணையான பாபநாசம் காரையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த அணைக்கு விநாடிக்கு  2 ஆயிரத்து 725 கன அடி நீர்வரத்து உள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 112.75 அடியாக உயர்ந்துள்ளது.

திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவையையும் பெருமளவு பூர்த்தி செய்து வருவதால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.