heavy rain will fall in south districts said meteorological centre

அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய துணை தலைவர் பாகுலேயன் தம்பி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தென்மேற்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடாவிலிருந்து வட தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. 

அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேநேரத்தில் சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும். வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என பாகுலேயன் தம்பி தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் மழை இல்லாமல் விவசாயிகள் வேதனைப்பட்டு வரும் நிலையில், இன்று தென்மாவட்டங்களில் மழை பெய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.