Asianet News TamilAsianet News Tamil

வங்கக் கடலில் புதிய புயல்…. அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனழை பெய்யும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain will be in south dists
Author
Chennai, First Published Dec 6, 2018, 6:17 AM IST

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.  காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.

heavy rain will be in south dists

இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்   குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

heavy rain will be in south dists

இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.

heavy rain will be in south dists

இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..

heavy rain will be in south dists

டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

heavy rain will be in south dists

இதனிடையே சென்னையில் நேற்று  மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios