தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்;- கரைகடந்து அரபிக்கடலுக்குச் சென்ற கஜா, அடுத்த 12 மணி நேரத்தில், மீண்டும் புயலாக வலுப்பெறும் என்றார். மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்பதால் தமிழகத்திற்கு நேரடியான பாதிப்பு இருக்காது என வானிலை மையம் கூறியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகையால் நாளை மாலை மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றார். 

எதிர்வரும் நவம்பர் மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக வரும் 19,20,21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அரபிக் கடல் பகுதிகளில் பகுதிகளில் 18, 19 ஆகிய தேதிகளில், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை 17 செ.மீ., கொடைக்கானல் 14 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.