heavy rain in nellai

வடகிழக்குப் பருவமழை தொடங்கியவுடனே கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த 10 மணி நேரமாக மழை இல்லாததால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆனால், நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்றிரவு கனமழை பெய்தது. நெல்லை மாநகரில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கனமழையால் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெல்லையில் நல்ல மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துவருகிறார். நேற்றிரவு கனமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.