கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போன்று நீலகிரி மாவட்டம் குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அப்போது முதலே நீலகிரி, கோவை, கன்னியாகுமர், நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், சேலாஸ், வண்டிசோலை, கட்டப்பெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 இதே போன்று கூடலூர், தேவால,  பந்தலூர் ஆகிய பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதையடுத்து , நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுார், குந்தா, கூடலுார், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கோவை மாவட்டத்திலும் பலட்தத மழை கொட்டி வருகிறது. கோவை நகர் பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக கொட்டி வரும் கனமழையால் பொது மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நடுமலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.