Heavy rain in Chennai

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த நாட்களில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் நெற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளுத்துவாங்கிய மழை இன்று காலை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காலை சுமார் 10.30 மணியளவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் வளசரவாக்கம், வடபழனி, போரூர், கிண்டி அடையாறு ஆகியப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.