Asianet News TamilAsianet News Tamil

இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 12 districts - Weather Update
Author
Tamil Nadu, First Published Aug 19, 2022, 1:59 PM IST

இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

19.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, தேனி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.08.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.08.2022 மற்றும்‌ 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க: மக்களே மிஸ் பண்ணாதீங்க!! ”நம்ம சென்னை - நம்ம பெருமை”.. சென்னை தினத்தையொட்டி சிறப்பு கலைநிகழ்ச்சிகள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.08.2022: தெற்கு வங்கக்கடல்‌, தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ . வட ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

20.08.2022: தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. வட ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌

21.08.2022: தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோரப் பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

22.08.2022. 23.08.2022: இலங்கை கடலோர பகுதியை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை! மனதை கலங்க வைக்கும் ஷாக்கிங் நியூஸ்! ஒரே காவலர் 17 முறை துப்பாக்கி சூடு

Follow Us:
Download App:
  • android
  • ios