Asianet News TamilAsianet News Tamil

உஷார்.. இன்று 10 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மிதமான மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கள் உள்ளிட்ட 0 மாவட்டங்களிலும் நாளை சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Heavy Rain in 10 districts - Today Weather Report May 26 2022
Author
First Published May 26, 2022, 2:00 PM IST

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கள் உள்ளிட்ட 0 மாவட்டங்களிலும் நாளை சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌
வெப்பச்சலனம்‌ காரணமாக,

26.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

27.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கடலூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.05.2022. 30.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்தகுற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

26.05.2022. 27.05.2022: இலட்சதீவு, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ மற்றும்‌ தென்தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஷாக்..! ஆவினில் பணி நியமன முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணம்.. 30 பேருக்கு சம்மன்..

Follow Us:
Download App:
  • android
  • ios