Asianet News TamilAsianet News Tamil

வெளுத்து வாங்கும் கனமழை.. இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

Heavy Rain.. Holidays for schools and colleges in two districts..
Author
First Published Feb 2, 2023, 7:59 AM IST

கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

Heavy Rain.. Holidays for schools and colleges in two districts..

கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட இரண்டு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios