சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில், நேற்று வெப்ப சலனம் காரணமாக பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் வீட்டிற்குள் உட்புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது, பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதாக கூறி, சாலைகளை உயரமாக போட்டதால். சாலையில் ஓடும் தண்ணீரும் வீட்டுக்குள் வந்து விடுவதாகவும், இதனால் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் வெளியே போக முடியாமல் வீட்டிற்குள்ளே இருப்பதால், குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மாவட்டத்தில் மாநகராட்சி அவலம் அரங்கேறி வரும் சூழலால் உறங்க கூட இடம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.