சென்னையில் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி, நந்தனம், சைதாபேட்டை, கிண்டி, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேற்கு மத்திய வங்க கடல் முதல் கன்னியாக்குமரி கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக திருச்சியில் 8 சென்டிமீட்டர் மழையும், ஆலங்குடி, திருப்புவனத்தில் தலா 7 சென்டிமீட்டரும், கரூர், பர்கூர், ஏற்காட்டில் தலா 6 சென்டிமீட்டரும் ஓமலூர், குடியாத்தம், ராசிபுரம், ராயக்கோட்டையில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னையில் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி, நந்தனம், சைதாபேட்டை, கிண்டி, கோட்டூர்புரம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.