Asianet News TamilAsianet News Tamil

ஷாக்கிங் நியூஸ்.. 22 வயது மருத்துவ கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகன் சக்தி(22). திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து இளநிலை மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

Heart Attack... Medical college student Died tvk
Author
First Published Aug 9, 2024, 2:25 PM IST | Last Updated Aug 9, 2024, 2:27 PM IST

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகன் சக்தி(22). திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து இளநிலை மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து  சக்தி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் சென்று பார்த்துள்ளனர். 

இதையும் படிங்க: மகள் வளைகாப்பு! பொருட்கள் வாங்க சென்ற தந்தை பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி படுகொலை! திருவாரூரில் பயங்கரம்!

அப்போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்தி உடலை கைப்பற்றறி பிரேத பரிசோதனைக்காக அவர் அதே மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  நிலச்சரிவில் இருந்து மீள்வதற்குள் வயநாட்டில் அடுத்த அதிர்ச்சி! அலறிய பொதுமக்கள்! சாலையில் தஞ்சம்!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில்  இரவு முழுவதும் படித்துவிட்டு உறங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவரது இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios