Asianet News TamilAsianet News Tamil

மிரட்டும் ஓமைக்ரான் .. சுகாதாரச் செயலர் பரபரப்பு சுற்றறிக்கை..

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
 

Health Secretary Statement
Author
Tamil Nadu, First Published Dec 10, 2021, 8:48 PM IST

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை செயலர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் கொரோனா கண்காணிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அதில் மத்திய அரசின் வழிகாட்டு தெறிமுறைகள் சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ததகுதியுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ உட்கட்டமைப்புகளை கண்காணிக்க வேண்டும், தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித தொய்வு ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ரிஸ்க் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனே வழங்கி தனிமைபடுத்த வேண்டும். அவர்களுடன் பயணம் செய்யும் சக பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நெகட்டிவ் வந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதிக்க வேண்டும்.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரித்து, தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா எனவும் கண்காணிக்க வேண்டும். ஒரு இடத்தில் அல்லது ஒரு குடும்பத்தில் அதிகப்படியானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் தொற்று பரவும் விகிதம் அதிகரிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

மாவட்டங்களில் பொது இடங்களாக இருக்கும் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக் கவசம் அணிவது குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டறிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத நபர்களையும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாத நபர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios