திருநெல்வேலி

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு 8 மற்றும் 9-வது படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றொர்கள் கொடுத்து புகாரின்பேரில் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர், 

tirunelveli க்கான பட முடிவு

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரில் உள்ளது பாரதியார் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன். இங்குப் படிக்கும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம், "தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்" என்று தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து பீதியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பாவிடம் நேரில் சென்று புகார் கொடுத்தனர். உடனே இதுகுறித்து விசாரிக்கும்படி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த்திற்கு உத்தரவிட்டார் ஆட்சியர் ஷில்பா.

sexual harassment for school students க்கான பட முடிவு

அதன்பின்னர், தேவ் ஆனந்த் தலைமையில் திருநெல்வெலி கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா, குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்திகா, பாலமுருகன், பரிமளம் ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விசாரணை நடத்த சென்றனர். 

அங்கு மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், "தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், 8 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை" என்பது தெரியவந்தது. 

arrest க்கான பட முடிவு

இதுபற்றிய அறிக்கையை ஆட்சியர் ஷில்பாவிடம் தெரிவித்தார் தேவ் ஆனந்த். ஆட்சியர் உத்தரவின்படி, தேவ் ஆனந்த் திருநெல்வெலி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அப்புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் வேல் கனி வழக்குப்பதிந்து ஃபோக்சோ சட்டத்தில் ஜூலியட் ரவிச்சந்திரனை அதிரடியாக கைது செய்தார். அதன்பின்னர் ஜூலியட் ரவிச்சந்திரனை காவலாளர்கள் திருநெல்வெலி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிபதியின் உத்தரவுப்படி ஜீலியட் ரவிச்சந்திரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்புடைய படம்

பள்ளி மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் பெற்றொர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.