டெல்டா மாவட்டங்களில் இருந்து ஒஎன்ஜிசி வெளியேற வலியுறுத்தி திருவாரூரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளது.

இதனால் குழாயில் விரிசல் ஏற்பட்டதைதொடர்ந்து  அப்பகுதி மக்கள் கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அடியமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடப் பணிகளை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஒஎன்ஜிசி வெளியேற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.