HC ban for velmurugan
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் லைக்கா நிறுவனத்தை பற்றியோ அதனை சார்ந்தவர்கள் பற்றியோ பொதுவெளியில் பேச கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தனியார் தொலைகாட்சி ஒன்றில் கலந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதை கண்டித்த லைக்கா நிறுவனம் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், வேல்முருகன் பேச்சால் தங்களது வியாபாரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் லைக்கா நிறுவனத்தை பற்றியோ அதனை சார்ந்தவர்கள் பற்றியோ பொதுவெளியில் பேச கூடாது என தடை விதித்துள்ளது.
