நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 11.50 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ  அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால  அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர், தனித்தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிக்கும் வகையில் மார்ச் 12 ஆம்தேதி நீட்டிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 11.50 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ  அறிவித்துள்ளது.