உலக நாகரீகத்துக்கெல்லாம் வித்திட்ட தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.  புத்தாண்டு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளிட்டுள்ளார்.ஹர்பஜன். அவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறோம். அதன்படி, விளம்பி புத்தாண்டு தினத்தை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். அதில் தமிழர் புத்தாண்டு தினத்துக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், தமிழா இது உன்னுடைய புத்தாண்டு. சோகங்கள், துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும். புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும். உலக நாகரீகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜனின் சிங் டுவிட்டர் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள், வரவேற்றும் மகிழ்ச்சியை தெரிவித்தும் வருகின்றனர். வணக்கம் சென்னை... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தழில் பேசி வாழ்த்தும் வீடியோவையும் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.