திருவாரூர்

சென்னையை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேரையும் உடனே தூக்கில் போட வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் திருவாரூரில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தின் அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 17 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது மாதர் சங்கம் செயல்படவில்லை என்று ஆதங்கப்பட்டு விமர்சித்தவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.