காலையில் சேலம் தொப்பம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களுக்கு தோலுக்கு தோல் கொடுத்தார். இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மதுரை அடுத்த அலங்காநல்லூர் வந்து சேர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அங்கு 2 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈட்டுபட்டு வரும் பல்லாயிர கணக்கான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஜிவிபிரகாஷ் போராட்ட களத்திற்கு வந்துடன் அப்பகுதியில் இருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் ஆரவாரம் செய்தனர்.பின்னர் பேசிய ஜிவி பிராகாஷ் தமிழத்தின் அடையாளத்தை இழக்க முடியாது.

இனிமேலும் தமிழர்கள் ஏமாந்து இருக்கமாட்டோம் தமிழகத்தின் பராம்பரிய காளை இனங்கள் அழிந்து விட்டதாகவும் தற்போது அவை வெளிநாட்டில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு தலைவலி ஏற்படுத்தும் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டுமென ஆவேசமாக தெரிவித்தார்.

ஹிப் ஹாப் தமிழா ஜிவி பிரகாஷ் போன்ற இளம் திரை பிரபலங்கள் போராட்ட களத்திற்கு நேரில் வந்தால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை பெற்றுள்ளது.