தடைக்குப்பிறகு தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ்-ன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகள் சோதனை நடந்த நிலையில், அது குறித்து முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று, சென்னை நொளம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக கூறினார். 33 ஆண்டுகளாக காவல் துறையில் சிறப்பான பணியை முடித்துள்ளதாக கூறியுள்ளார். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையைக் கூற விரும்பவில்லை.

 

ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பாதுகாக்க சில அறிவுறுத்தல்களை நீதிமன்றங்கள் வெளியிட்டுள்ளன. பணம் அளிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தேதிகளில் நான் பதவியில் இருக்கவில்லை எப்ஐஆரில் உள்ள 21.4.16, 25.6.16, 26.6.16 ஆகிய தேதிகளில் நான் காவல் ஆணையராக இல்லை என்று கூறியுள்ளார். சிபிஐ சோதனை குறித்து ஐபிஎஸ் ஜார்ஜ் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.