Asianet News TamilAsianet News Tamil

குட்கா, புகையிலை, பான் மசாலா விற்பனை செய்ய ஓராண்டு தடை நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
 

Gutka ban extended one year in Tamil Nadu
Author
Tamil Nadu, First Published May 27, 2022, 11:19 AM IST

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு  தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின் படி, குட்கா, புகையிலை, பான் மசாலா ஆகிய பொருள்களை தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கி வைப்பது ஆகியவை குற்றமாகும். இதனிடையே, சமீபத்தில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, டிஜிபி உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையினரால் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களின் விற்பனையை ஒழிக்கும் வகையில் ”ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 “ நடத்தப்பட்டது. இதன் மூலம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டோர் அதிடியாக கைது செய்யப்பட்டனர்.

காவல்நிலை நூண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் கஞ்சா, குட்கா குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அண்டை மாநில போலீசாருடன் இணைந்து கஞ்சா செடி ஒழிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து மனநல ஆலோசகரிடம் அனுப்பில் ஆலோசனை பெற வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: மாறுவேடத்தில் சென்ற போலீசாரிடமே கடத்தல் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு பேரம் பேசிய நபர்.. அப்பறம் என்னாச்சு..?

Follow Us:
Download App:
  • android
  • ios