guna cave reopen again
இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில், கமல்ஹாசன், ரோஷிணி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்து 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'குணா".
அதிலும் இந்தப் படத்தில் வரும் 'அபிராமி.. அபிராமி...' என்ற வசனத்தையும் 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்' என்ற பாடலையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் உள்ள ஆபத்து நிறைந்த ஒரு குகையில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வந்ததால் இந்த குகைக்கு பெயரே குணா குகை என்று மாறிவிட்டது.
![]()
மிகவும் ஆபத்து நிறைந்த இடத்தில் இந்த குகை அமைந்திருந்ததால் பலர் தவறி விழுந்து மரணமடைந்தனர். இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த குகையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இந்த குகைக்குச் செல்லும் பாதை இழுத்து மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் குணா குகையை திறப்பதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல மரப்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
