Asianet News TamilAsianet News Tamil

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்..

GST Tamilnadu assertion at the meeting
GST Tamilnadu assertion at the meeting
Author
First Published Aug 5, 2017, 5:54 PM IST


டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வறுகடலைக்கு வரி விலக்கு, நாப்கினுக்கான வரி விலக்கு உட்பட சுமார் 40 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை மக்களுக்கு சுகம் அல்ல,
சுமைதான் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

வரிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ஒரே வரியாக வருவதால் உற்பத்தி விலை தானாகவே குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் முன் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக பெறப்பட்டுள்ள 60 மனுக்களில் உள்ள கருத்துகளை இந்த கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட உள்ளது.

தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வறுகடலைக்கு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதேபோல், இட்லி - தோசை மாவு, கைத்தறி - விசைத்தறி நெசவுக்கு முழு வரி விலக்கு அளிக்கவும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாப்கினுக்கான வரியை 5 சதவீதமாக குறைப்பது உட்பட சுமார் 40 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதற்கு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios