சென்னை தி.நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனமான சரவணா ஸ்டோஸ், வசந்தன் & கோ, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

ரூபாய் 40 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து, அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். 

அதேபோல் பாடி மற்றும் போரூரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட அதன் கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடியிலும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு போரூர் மற்றும் OMR ஆகிய இடங்களில் தன்னுடைய புதிய கிளையை திறந்தது சரவணா ஸ்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ரூபாய் 40 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே வரி ஏய்ப்பு குறித்து முழு விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் தி.நகர் பகுதியில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது.