Asianet News TamilAsianet News Tamil

நெல்லை கண்ணன் யார்..? ஆன்மீக சொற்பொழிவாளர் ... தமிழறிஞர்... கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர்...

திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, சேப்பாக்கத்தில் போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். 

Great orator Nellie Kannan passed away due to ill health
Author
Chennai, First Published Aug 18, 2022, 1:55 PM IST

தமிழ் கடல் நெல்லை கண்ணன்

காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் இன்று நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77,  கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவரது உயிர் இழப்பு தமிழ் உலகத்திற்கு பேரிழப்பு என தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Great orator Nellie Kannan passed away due to ill health

கருணாநிதிக்கு எதிராக போட்டி

காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். அவருக்காக ஜெயலலிதா பிரசாரமும் மேற்கொண்டார். எனினும் அந்தத் தேர்தலில் நெல்லை கண்ணன் தோல்வியடைந்தார்.

நெல்லை கண்ணன் யார்..? கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர்... அதிமுகவுக்காக ஊர் ஊராகப் பிரசாரம் செய்தவர்!

Great orator Nellie Kannan passed away due to ill health

2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் ‘அதிமுகதான் சிறந்த கட்சி; ஜெயலலிதாதான் சிறந்த தலைவர்’ என கூறியிருந்தார். இதனையடுத்து போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து ஜெயலலிதா, அதிமுகவிற்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளும்படி கேட்டிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும்  அதிமுகவுக்கு ஆதரவாகப் நெல்லை கண்ணன் பிரசாரம் மேற்கொண்டார்

இதையும் படியுங்கள்

நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை..

 

Follow Us:
Download App:
  • android
  • ios