திமுக தலைவர் கருணாநிதிக்கு 3-ம் வகுப்பு சிறுமி கடிதம் எழுதியது உணச்சிபூர்வமாக அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த வருடமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் குவிந்தனர். எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா" என கோஷம் எழுப்பிய படி காத்திருக்கின்றனர். பலர் கண்ணீர் விட்டு அழுவும் காட்சிகளும் காண முடிந்தது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னையை சேர்ந்த 3-ம் வகுப்பு சிறுமி மிராக்லின் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும். அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். எப்பொழுது நீங்கள் நோய் வாய்ப்பட்டிற்களோ, நான் அழுதேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை செய்றேன். தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் உள்ளது என்றார். இது திமுக ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் சிறுவன் ஒருவன் திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவம் பார்க்க போகிறேன், அவரை காப்பாற்ற போகிறேன் என்று கூறிய சிறுவனின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.