govt palnned to increase the cost of beer upto rs 10 from march
வருவாய் இழப்பை சரி செய்யும் பொருட்டு,டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பீர்களின் விலையை ரூ.10 உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு வருமானம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது,மதுபான விற்பனை தான்...
மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடிக்கு மேல், வருவாய் கிடைத்து வந்தது.

ஆனால் தற்போது, கோர்ட் விதித்த உத்தரவு படி, 1000க்கும் மேலான டாஸ்மாக் கடைகள் மூடல், நேரமும் குறைப்பு உள்ளிட்ட காரணத்தால், வருவாய் குறைந்து விட்டது
இந்நிலையில்,வருவாய் இழப்பை சரி செய்யும் பொருட்டு,ஏற்கனவே அனைத்து மதுபானங்களின் விலையை சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
தற்போது மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிடப் பட்டு உள்ளது.அதன்படி அனைத்து பீர்களின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட உள்ளது
இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலால், குடிமகன்கள் கொஞ்சம் சோகம் அடைந்து உள்ளனர். இருந்தபோதிலும் மதுபானம் வாங்காமல் இருக்க போவதில்லை என நெட்டீசன்கள் தெரிவிகின்றனர்.
