நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின், பெண்கள் படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் முக்கிய அங்கம் வகித்த வீர மங்கை எம்.கோவிந்தம்மாள் மரணமடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின், பெண்கள் படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் முக்கிய அங்கம் வகித்த வீர மங்கை எம்.கோவிந்தம்மாள் (90) மரணமடைந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்றுகாலை கோவிந்தம்மாள் காலமானார்.

மலேசியாவில் நேதாஜியின் உரையை கேட்ட உடனேயே தான் அணிந்திருந்த 6 சவரன் வளையலை கழற்றி கொடுத்த கோவிந்தம்மாள், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் இந்திய தேசிய ராணுவத்துக்கு அளித்தார். மேலும், துப்பாக்கி சுடுதலில்சிறந்த பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச்சடங்கு ஆம்பூர் கிருஷ்ணாபுரம் மயானத்தில் நாளை மாலை நடக்கிறது.