Governor vidyasagar rao appointed TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமிப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிமுக அரசின் ஆட்சிக் காலம் முடிவதற்கு மூன்று மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் உறுப்பினர்கள் அவசர கதியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின்போது, தகுதி, திறமையை கருத்தில் கொள்ள வேண்டும், ஆனால் இந்த 11 பேரும் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுகளாக உறுப்பினர் இல்லாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இயங்கி வந்தது.

இந்தச் சூழலில் ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், சுப்பையா, மற்றும் பாலுசாமி ஆகிய ஐந்து பேரை புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் வெளியிட்டுள்ளார்.