ஆளுநரின் உத்தரவு மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி! வானதி சீனிவாசன் பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

governor RN Ravi order is a victory for M.K.Stalin says Vanathi Srinivasan

ஆளுநர் ஆர்.என். ரவி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பாஜக எம்எல்ஏ வானதி இவ்வாறு கூறியுள்ளார்.

"செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்ததே மு.க.ஸ்டாலின்தான்;இதை அவர் மறந்துவிடுகிறார். இப்போது வெற்றி அடைந்திருப்பது ஸ்டாலின்தான். இது அதிமுக, பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

Senthil Balaji: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆன்.என்.ரவி அதிரடி உத்தரவு

governor RN Ravi order is a victory for M.K.Stalin says Vanathi Srinivasan

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

governor RN Ravi order is a victory for M.K.Stalin says Vanathi Srinivasan

கவர்னர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம்... அதிகாரம் இல்லை: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios