செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஆளுநர் தனது கடமையை உணர்ந்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆன்.என்.ரவி அதிரடி உத்தரவு
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதனால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த இலாக்காக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து கொடுத்தார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் வழங்கபட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கான ஒப்புதல் பெற ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியபோது, அதனை ஏற்காமால் திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறி இருந்தார். பின்னர் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி கைது குறித்து குறிப்பிட்டு அனுப்பிய பரிந்துரையைத்தான் ஆளுநர் ரவி ஏற்று ஒப்புதல் வழங்கினார்.
செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதி..! நீதிமன்ற காவலை நீட்டித்து அதிரடி உத்தரவு