செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதி..! நீதிமன்ற காவலை நீட்டித்து அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை காணொலி காட்சி மூலமாக நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Court orders extension of Senthil Balaji's custody till July 12

செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துவத்துறையில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை கடந்த 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இருதயப் பகுதியில் 3 அடைப்புகள் இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. 

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் வந்து பார்த்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியை  14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார்.இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைசிகிச்சையும் தனியார் மருத்துமனையான காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டது. இதே நேரத்தில் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பாக கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி லேசாக வலி இருப்பதாக கூறினார். இதனையடுத்த வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காலை நீட்டித்து நீதிபது உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி வழக்கு..! அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios