சேலம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் தமிழக விசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  

தேசிய நதிநீர் திட்டத்தை அமைக்க வேண்டும், 

தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கபட்டது.