Asianet News TamilAsianet News Tamil

கொத்தாக கோர்ட் படி ஏறிய நக்கீரன் ஊழியர்கள்...! முன்ஜாமீன் கேட்டு மனு!

நக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Governor complaint... Nakheeran employees demanding anticipatory bail
Author
Chennai, First Published Oct 11, 2018, 2:55 PM IST

நக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். Governor complaint... Nakheeran employees demanding anticipatory bail

 பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில்  நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், நேற்று முன்தினம் காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் கைது செய்து  சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில்  4 மணி நேரம்  விசாரணை நடைபெற்றது. வந்த அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.

 Governor complaint... Nakheeran employees demanding anticipatory bail

மாணவிகளை தவறான வழியில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட வழக்கில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நக்கீரன் இதழில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆளுநரை, தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என்று நீதிபதி மறுத்தார். Governor complaint... Nakheeran employees demanding anticipatory bail

இதையடுத்து நக்கீரன் கோபால் சொந்த ஜாமினில் வெளியே வந்தார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நிலையில், நக்கீரன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டு இருப்பதாவும் தகவல் வெளியானது. சர்ச்சைக்குரிய அட்டைப்படத்தை வடிவமைத்தவர், புகைப்படக்காரர், நக்கீரன் இதழின் துணை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Governor complaint... Nakheeran employees demanding anticipatory bail

இந்த நிலையில், நக்கீரன் வார இதழின் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பேசி வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ, நக்கீரன் கோபாலை மீண்டும் கைது செய்யக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் நக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios