காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின்...! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர்

காந்திஜெயந்தியையொட்டி சர்வோதய சங்கம் சார்பில் நூற்பு வேள்வி மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர்கள் ஆகியோர் கண்டுகளித்தனர்.

Governor and Chief Minister paid floral tributes on Gandhi Jayanti

காந்தி ஜெயந்தி விழா

தேசத்தந்தை மகாத்மா  காந்தியின் 154-வது பிறந்தநாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.காந்தி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பரந்தாமன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில், சர்வோதய சங்கம் சார்பில் நூற்பு வேள்வி மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர்கள் ஆகியோர் கண்டுகளித்தனர். தேசத்தந்தை காந்தியடிகளின் காந்திய பாடல்கள், கதர் நூலாடை பின்னுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்வி கொள்கை.. மலையாளத்தில் பேசி மாஸ் காட்டிய ஸ்டாலின்.!

Governor and Chief Minister paid floral tributes on Gandhi Jayanti

காதி விற்பனையை துவக்கிய ஆளுநர்

மேலும், காந்தியடிகள் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிடும் வகையில் காதி சர்வோதயா சங்கம் சார்பில் சிறப்பு விற்பனை நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் 154-வது காந்தி ஜெயந்தியொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது 75ஆயிரம் ரூபாய்க்கு காதி துணிகளை அமைச்சர் காந்தி வாங்கினார்.

 இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, காந்தி ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என கூறினார். பல்வேறு சமூக மக்கள் வாழும் இந்தியாவில் அவரது தத்துவங்கள் அனைவருக்கும் தேவை என குறிப்பிட்டார். நமது சிந்தனை சமூகத்தில் உள்ள ஏழைகளை குறித்து சிந்திக்க வேண்டும். மற்ற காலங்களை விட காந்தியின் தேவை இன்று நமக்கு அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.  காதி நமக்கான ஒரு அடையாளம். அதிக சக்தி வாய்த்தது. தமிழக அரசு இதற்கு ஆதரவு வழங்குகிறதை பாராட்டுவதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

இருளில் மூழ்கிய புதுச்சேரி.! வீதிக்கு வந்த மக்கள்... முதல்வர் தொகுதியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்...!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios