காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்வி கொள்கை.. மலையாளத்தில் பேசி மாஸ் காட்டிய ஸ்டாலின்.!
நாம் வெவ்வேறு இயக்கங்களாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக் காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இம்மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,’திமுக - கம்யூனிஸ்ட் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது. மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம். தேசிய கல்விக் கொள்கை என்பது காவி கொள்கையாக உள்ளது.
இதையும் படிங்க..கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!
நாம் வெவ்வேறு இயக்கங்களாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக் காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பினராயி விஜயன் கேரளத்தில் முதலமைச்சராக இருக்கிறார். அதனால் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என நாம் நினைக்கக் கூடாது.கூட்டாட்சி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, சமத்துவம், பொதுநலன், சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநிறுத்த குரல் எழுப்ப வேண்டும்.
சித்தாந்தத்தை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும். அங்கும் இங்கும் தனித்தனி குரல்கள் அதிகம் இல்லை. அது ஒன்றுபட்ட குரலாக இருக்க வேண்டும். சில மாநிலங்களில் மட்டும் ஒன்றாக இருந்தால் போதாது.காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்விக் கொள்கை. நேரடியாக செய்ய முடியாதவைகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்
ஆளுநரை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. மாநிலங்கள் நகராட்சி போல் மாறி வருகின்றன. அது இருக்கும் இடம் தெரியாமல் பின்னால் தள்ளப்பட்டுள்ளன. நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்களை அல்ல. நமது அரசியலமைப்பு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை’ என்று கூறினார்.
இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ