ஒரே ஆசிரியை... ஒரே மாணவி... பரிதாப நிலையில் அரசு பள்ளி..!

போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவிக்காக மட்டும் அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் அவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் இருந்து கொண்டு பாடத்தை கற்பித்து வருகிறார். 

Government school in poor condition


போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவிக்காக மட்டும் அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் அவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் இருந்து கொண்டு பாடத்தை கற்பித்து வருகிறார். 

கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியின் நிலைமை சொல்ல முடியாத அளவுக்கு துயரமாக இருக்கிறது. ஏனென்றால் தற்போது தனியார் பள்ளியின் மோகம் அதிகரித்துள்ளது. கூலி வேலைக்காவது சென்று தமது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆகையால் அரசு பள்ளிகளின் நிலைமை அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடிவில்லை. Government school in poor condition

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1956-ல் கட்டப்பட்ட இப்பள்ளியில், ஜோகிப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். 

கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நடப்பாண்டில் இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். 4-ம் வகுப்பு படிக்கும் அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் யாரும் கிடையாது. ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். அதேபோல் சத்துணவு ஊழியர் ஒருவரும் உள்ளார். தற்போதைய நிலையில், இந்த 3 பேருக்காகவே பள்ளி இயங்கி வருகிறது.

 Government school in poor condition

இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரேகா கூறுகையில் தனியார் பள்ளி மோகத்தால் கிராமத்தில் உள்ள மாணவர்களும் அங்கு சென்று விட்டனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பெற்றோர் புறக்கணித்து விட்டனர் என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios