சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு வினாத்தாள் பற்றாக்குறையால் ஒரு வினாத்தாளை வைத்து 2 முதல் 3 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சிவகங்கை மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த மே 9-ம் தேதி முதல் இறுதித் தேர்வு நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, மாவட்டஅளவில் அனுப்பப்படுகின்றன. இதனிடையே பல அரசு பள்ளிகளில் வினாத்தாள்கள் பற்றாக்குறையாக அனுப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் ஒரு வினாத்தாளை கொண்டு, 2 முதல் 3 மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை உள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆனால் தேர்வு கட்டணமாக ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வினாத்தாள் பற்றாக்குறையால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பிரபல தனியார் கல்லூரி பேருந்தில் திடீர் தீ விபத்து.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 35 மாணவர்கள்..!

இதுக்குறித்து பேசும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளில் 3 மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள் கொடுத்து தேர்வு எழுதக் கொடுக்கின்றனர். மாணவர்கள் அருகருகே அமர்ந்து, தேர்வை எப்படி ஒழுங்காக எழுத முடியும் . இதற்கு இறுதித்தேர்வு நடத்தாமலே ஆல் பாஸ் செய்திருக்கிலாம் என்று வேதனையுடன் கூறுகின்றனர். 

மேலும் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்றவாறு வினாத்தாள் தரமாக இருப்பதில்லை. கடைகளில் தரமான காகிதத்தில் நகல் எடுத்தாலே 50 காசு முதல் ரூ.1 தான் வாங்குப்படுகிறது. அப்படி பார்த்தால் 6 பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் வினாத்தாள்கள் 20 பக்கம் தான் வருகிறது. ஆனால் 10 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு திருப்புல் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.80 கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

அதேபோல, பிளஸ்1-க்கு நடந்த ஒரு திருப்புதல் தேர்வுக்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆனால் வினாத்தாள் தரமில்லாத காகிதத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. இதனால் கட்டணத்தை குறைக்கவும், வினாத்தாள்களை பற்றாக்குறை இன்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.இதுகுறித்து விளக்கமளித்த சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், ‘‘பற்றாக்குறையுள்ள பள்ளிகளை கண்டறிந்து கூடுதலாக வினாத்தாள்களை அனுப்பி வருகிறோம்’’ என்றார்.

மேலும் படிக்க: பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற தாய்.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்.!