Government Retirement Meeting on November 10 - Announcement of Theni ...

தேனி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனியில் நவம்பர் 10-ஆம் தேதி அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தேனி மாவட்ட ஆட்சியரான எனது தலைமையில் நவம்பர் 10-ஆம் தேதி அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில், அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.

குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் தீர்வு காண்பதற்கு வாய்ப்பாக, ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை நவம்பர் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். அதன்மூலம் அவர்களது குறைகளுக்கு தீர்வு காண எளிதாக இருக்கும்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொளவர்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.