திருச்சி 

திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தம்பதி மீது அரசுப் பேருந்து மின்னல் வேகத்தில் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

thiurchi name board க்கான பட முடிவு

திருச்சி மாவட்டம், ஒத்தக்கடை, புதுத்தெருவைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் மாணிக்கம் (40). பிளம்பராக பணியாற்றி வரும் இவருக்கு சுதா (38) என்ற மனைவி உள்ளார். 

இவர்கள் இருவரும் ஜோடியாக மோட்டார் பைக்கில் தஞ்சையில் உள்ள மாத்தூரில் நடைபெறும் திருமணத்திற்கு புறப்பட்டனர். நேற்று நடந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தங்களது மோட்டார் பைக்கில் வீட்டுக்குத் திரும்பினர்.

bus bike accident க்கான பட முடிவு

இவர்கள் இருவரும் குண்டூர் பகுதியில் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இப்பேருந்து மோட்டார் சைக்கிளின் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் மோட்டார் பைக்கில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இவ்விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நாவல்பட்டு காவலாளர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

dead க்கான பட முடிவு

பின்னர், இவ்விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். மேலும், விபத்து நடக்க காரணம் என்ன? ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது அதிவேகமா? என்று விசாரித்து வருகின்றனர்.