தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள், இனிப்புடன் கொண்டாட வேண்டும். விவசாயிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அறுவடை செய்து, மேன்மேலும் வளம் பெற வேண்டும். இதன் மூலம் நாடும் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.