ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.  இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூரில் ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி சென்ற அரசுப்பேருந்தும், சிவகாசியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிவந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த காரில் 7 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதீஷ், உமையபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தூக்ககலக்கத்தில் விபத்து நடந்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.