திருச்சி:

ஏர் ஆசியா விமானத்தில், ரூ.45 இலட்சம் மதிப்பிலான தங்கம் டார்ச் லைட்டில் வைத்து கடத்தி வரப்பட்டதை கையும் களவுமாக பிடித்தனர்.

இன்று காலை மலேசியாவில் இருந்து திருச்சி வந்தடைந்தது ஏர் ஆசியா விமானம். இந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு பயணியின் டார்ச் லைட்டில் தங்கம் மறைத்து வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை தீவிர சோதனை செய்ததில், அதன் மதிப்பு ரூ.45 இலட்சம் எனவும், அதன் எடை 1.5 கிலோ எனவும் தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.