god news to students regarding neet exam

தமிழக மானவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கிய சிபிஎஸ்இ உத்தரவு ரத்து செய்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது

தூத்துக்குடி நெல்லை கான்னியாகுமரி மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையங்களை ஒதுக்கியது சிபிஎஸ்இ.

இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இது குறித்த வழக்கு விசாரணை முடிந்தவுடன், இன்று ஆணை வெளியிட்டது சென்னை உயர்நீதிமன்றம் அதில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது

மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வை எழுத அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதினால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப் படுவார்கள் என்பதாலும், குறைந்தது 500 கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.