Asianet News TamilAsianet News Tamil

தவறான வினாவுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Give the score to the wrong question - The High Court orders the schooling department
give the-score-to-the-wrong-question---the-high-court-o
Author
First Published Apr 29, 2017, 8:10 PM IST


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட வினாவுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கடந்த மார்ச்  2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 2,427 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், விலங்கியல் தேர்வு வினாத்தாளில் 16 வது கேள்விக்கான விடை தவறாக பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 16 வது கேள்விக்கான பதிலை தவறாக பிரின்ட் செய்தது கண்டிக்கத்தக்கது எனவும், பள்ளிக்கல்வித்துறை வினாத்தாளை தயார் செய்யும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியது.

மேலும் தவறாக பிரின்ட் செய்யப்பட்ட வினாவிற்கு ஒரு மதிப்பெண் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios