பேரனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாத்தா மற்றும் பேரனின் இந்த மோசமான செயல் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரது தாய் சமீபத்தில் இறந்து விட்டார்.

இந்நிலையில். இளம்பெண்ணின் உடலில் மாற்றம் தென்பட்டது. வயிறு சற்று பெரிதாக இருந்தது குறித்து அந்த பகுதி பெண்கள் கேட்டனர். ஆனால் இளம்பெண் சமாளித்து வந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் வயிற்று வலியால் அலறி துடித்தார். உறவினர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 6 மாத கர்பமாக உள்ளதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து கேட்டபோது அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோஜ்குமார் என்பவர் தன்னை காதலிப்பதாகவும், தன்னையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். இதை நம்பி நானும் அவரை காதலித்தேன். ஆசைக்கு இணங்கும்படி மனோஜ்குமார் வற்புறுத்தினார். நானும் ஆசைக்கு இணங்கினேன் என்று கூறினார். இதனையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார். உத்தரவையடுத்து அவர் காதலன் மனோஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில் மனோஜ்குமார் இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு தான் மட்டும் காரணமல்ல. அவரது தாத்தா மோசஸ் (இவருக்கு வயது 65) என்பவரும் காரணம் என்று அதிர்ச்சிகரமான தகவல்களை கூறினார்.

இது குறித்து இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, காதலனுடன் பேச எனது தந்தையின் சித்தப்பாவான மோசசின் செல்போனை அடிக்கடி பயன்படுத்தினேன். நாங்கள் பேசும் உரையாடல் மூலம் நானும், மனோஜ்குமாரும் உல்லாசம் இருந்த தகவல் எனது தாத்தாவுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, உனது காதலனுடன் (பேரன்) உல்லாசம் இருந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் என்னுடன் உல்லாசத்துக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார் என்று கூறினார்.

இதனையடுத்து, காதலன் மனோஜ்குமார் மற்றும் இளம்பெண்ணின் தாத்தா மோசஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கர்ப்பிணியான இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பம் என்பதால் கருக்கலைப்பு செய்ய வாய்ப்பில்லை. அப்படி செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் அதனால் குழந்தை பிறந்த பின்னர் எடுக்கப்படும் டி.என்.ஏ. சோதனையில் குழந்தை யாருக்கு பிறந்தது என்பது நிரூபிக்க முடியும் என்றனர். சிறுமி குழந்தையை பெற்றெடுக்க பலவீனமாக உள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் கூறினர்.