பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புறப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர் நல்ல பாம்பு கடித்து இறந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தனலட்சுமி பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், வலங்கைமான் அருகே இனம்கிளியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்தக்காக, மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். 

மருத்துவமனை செல்வதால் அதற்கு தேவையான துணி உள்ளிட்டவைகளை அவர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த நிலையில், தனலட்சுமி வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது, தனலட்சுமியை நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது.

பாம்பு கடித்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார் தனலட்சுமி. இவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் கிருஷ்ணனர், உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். 

தனலட்சுமியை, உடனடியாக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவ நாள் அன்று நிறைமாத கர்ப்பிணி தனலட்சுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.