மாமல்லபுரம்
தீபாவளியின் மறுநாளான ஞாயிற்றுக் கிழமையன்று, மாமல்லபுரத்தின் கடலில் இராட்சத அலைகள் எழும்பி, கடல் நீர் கரையை கடந்து குளம்போல காட்சியளித்தது.
“மாமல்லபுரம்” உலக புராதன நகரம் என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில் பொழுதை போக்கி இன்புறுகின்றனர்.
கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடும் இவர்கள், இதனை பூலோகத்தின் சொர்க்கம் போன்று பார்க்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது. கரைப்பகுதி வரை இராட்சத அலைகள் எழும்பி வந்து மக்களை பயமுறுத்தின.
அலையின் சீற்றம் காரணமாக இராட்சத அலையில் சிக்கி படகுகள் கரைக்குத் தூக்கி வீசப்பட்டன. அப்போது மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.
கடல் நீர் கரைப்பகுதியையும் தாண்டி உட்புகுந்து குளம் போல தேங்கி நின்றது. இதனைக் கண்டவர்கள் மனதில் பயத்தை வேரூண்றியது கடல்.
